போலி டாக்டர் பட்டம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை..!

Default Image

அமைச்சர் பொன்முடி தலைமையில் போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்து துணை வேந்தர்களுடன்  ஆலோசனை கூட்டம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த மாதம் 26ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தனியார் அமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு, தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் யூ-டியூப் பிரபலன்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

போலி டாக்டர் பட்டம் 

இது போலியானது என தெரியவர, இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்திருந்தார். மேலும், இந்த போலி டாக்டர் பட்டம் தொடர்பாக கோட்டூர்புர காவல்நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி ஆலோசனை 

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தலைமையில் போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்து துணை வேந்தர்களுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்