அரசு பள்ளியில் போலி சான்றிதழ்..! ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

Default Image

கரூர் மாவட்டத்தில் உள்ளபெரிய வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக கண்ணன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார்.
கண்ணன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர். ஆனால் இவர் பட்டியல் இனத்தவர் என பொய் சொல்லி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் நடத்திய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆசிரியர் கண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனால்  கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலருக்கு த.அன்பழகன் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் ஆசிரியர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்