சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். இவர் ஏரிகளை சீரமைப்பது போன்ற பொது பணிகளை செய்து வரும் போது ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் பேசுவார். மத்திய அரசின் 8 வழிச்சாலை , ஹைட்ரோகார்பன் , உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிடுவார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்தவர்கள் பியூஸ் மனுஷ் அலுவலகத்தை விட்டு போகுமாறு கூறினார்.
பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ் மனுஷ் செல்போன் கீழே விழுந்தது இதனால் ஃபேஸ்புக் லைவ் நின்றது. இதற்கிடையில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அழைத்து செல்லும் போது போலீஸ் முன்பாக பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் , தனது சுய விளம்பரத்திற்காக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…