நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அதே கடைகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. 3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் நியாய விலைக்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…