நியாய விலைக்கடை – தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

நியாய விலைக்கடைகளில் இன்றியமையா பண்டங்களை, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெறலாம என உணவுப் பாதுகாப்புத்துறை அறிவிப்பு.

நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாய விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், எந்தவொரு அட்டைதாரரும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அறுவலகங்களுக்கு இக்கோரிக்கை தொடர்பாக நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அங்கீகார படிவத்தினை கடையிலேயே பெற்று கடையிலேயே மீள வழங்கி அதன் மீதான நடவடிக்கை கோருகையில், கடைப் பணியாளரே அப்படிவத்தினை தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பி அங்கீகரிக்கப்படும் நிலையில், அட்டைதாரர் எவரும் நேரடியாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளும் அவசியமில்லை. இதற்கு கடைப் பணியாளர் உரிய பதிவேடு தயார் செய்து போதிய எண்ணிக்கையில் அக்கோர படிவங்களை தனது கையிருப்பில் வைத்திருப்பது அவசியமாகும்.

அட்டைதாரர் குடும்பத்தில் வேறு நபர் எவரும் இல்லாத நிலையில், கோரிக்கை படிவம் பெற்று உடனேயே இன்றியமையாப் பண்டங்களை அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக வழங்கி, அதன் பின்னர் அக்கோரிக்கை படித்தினை உதவி ஆணையாளர்/வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி தீர்வானை பெறலாம்.

நியாய விலைக் கடையின் செயல்பாட்டுக்கென லாப நோக்குடன் இருப்பில் வைத்து விநியோகிக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தினை சாராத கட்டுப்பாடற்ற பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்யக்கூடாது.  அப்பொருட்கள் அட்டைதார் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கையில் அதனை விதியோகிக்கும் போது அவற்றுக்கென தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரத்து வழங்கப்பட வேண்டும்.

ஏனெனில், இக்கட்டுப்பாடற்ற பொருட்கள் பொது விநியோக திட்டத்தில் அடங்காது என்ற நிலையி,ல் அவற்றை மென்பொருள்படி பொது விநியோகத்தின் குறுஞ்செய்தியில் இணைக்க வழிவகை இல்லை என உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் மீண்டும் கை கலப்பு! எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…

43 mins ago

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” விஜய் டிவீட்.!

சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

54 mins ago

அமரன் முடிஞ்சது..”கூலி ஷூட்டிங் போறேன்”!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…

1 hour ago

“விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால்.?” திருமாவளவன் விளக்கம்.!

சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

1 hour ago

கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!!

சென்னை :  தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…

2 hours ago

சென்னை மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : இது அவுங்க ஊர் ‘பொங்கல்’ திருவிழா!

சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…

2 hours ago