ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் -தெற்கு ரயில்வே

Default Image

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவைகள் தொடங்குகிறது. அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்களுக்கு ரயிலில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் Non-Peak Hours-ல் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இரவு 7:30 மணி முதல் கடைசி ரயில் செல்லும் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணியவில்லையென்றால் ரூ.500  அபராதம் விதிக்கப்படும் என்றும், ரயில் நிலைய வளாகங்களில் கூட்டமாக நிற்பதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரயில் பயணிக்கும் போது,உங்களது ஆவணங்களை சரிபார்க்க ரயில்வே ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பாசிடிவ் அல்லது காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்