பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை -இல.கணேசன்
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- அதிக பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றால் ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் இதன் போராட்டத்தில் பல்வேறு பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது.
இந்நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் உத்தரபிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் கூறுகையில்,அதிக பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றால் ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை.பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது” .
இலங்கை தமிழர்கள் குடியுரிமை கேட்டால் அதை கொடுப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லவே உதவி கேட்கிறார்கள். இலங்கை தமிழர்களை மறு வீட்டிற்குச் செல்லும் பெண்ணைப் போல் கௌரவமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.