#BREAKING: நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் வயது 19, நீட் தேர்வில் தொடர் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல், நேற்றிரவு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவர் ஜெகதீஸ்வரன், இருமுறை தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மருத்துவ கனவை எட்ட முடியாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாணவனின் தந்தை செல்வசேகர், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என நேற்று ஆளுநர் ரவி கூறியது குறிப்பிடத்தக்கது.