தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை சென்று கொண்டிருக்கிறது. பின்னர் ஆங்காகே வெற்றி பெற்றவர்களை அறிவித்து வருகிறது.
அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரைப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு சிங்காரம் என்பவர் போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிங்காரம் ஆதரவாளர்கள், அந்த கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் சரமாரியாக அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அறந்தாங்கி, ஆலங்குடி சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…