மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டை அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வழுந்த (LT/LTCT) ஆலை, வணிக நிறுவனங்களுக்கு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுட்டுள்ளது. மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் எழுத்து மற்றும் பகைப்படமெடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலை பொறியாளர்களுக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் http://WWW.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் உதவி பொறியாளர் அலுவக கைபேசி, இ-மெயில் விவரத்தை அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் செலுத்திய மின்கட்டண தொகையை மார்ச், ஏப்ரலுக்கு செலுத்தலாம் என முன்பு கூறப்பட்டது. முந்தைய மாத கட்டணத்தை செலுத்துவது தற்போதைய மின்நுகர்வு அடிப்படையில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் புகாரை தொடர்ந்து தமிழ்நாடு மின்சாரவாரியம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…