காதலை ஏற்க மறுத்ததால் பேஸ்புக் காதலனை கடத்தி கொல்ல முயற்சி! காதலியை தேடும் போலீசார்…
பேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்து கொண்டு காதலித்து வந்த பேஸ்புக் ஜோடிக்கு நேரில் சந்தித்ததும் ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது.
மும்பையில் வேலை என்ஜினியராக வேலை செய்துவரும் அசோக் குமார் என்பவர், மலேசியாவை சேர்ந்த அமுதா என்ற பெண்ணும் பேஸ்புக்கில் நட்பாக பழகி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இணையத்தில் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்து, தேனி வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கொண்டபோது, அசோக் குமாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. போட்டோவில் பார்த்த அமுதா நேரில் வேறு தோற்றத்தில் குண்டாக, வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்துள்ளார். இதனால், அசோக், அமுதாவை விட்டு விலகி தனது பேஸ்புக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால், அமுதா , திரும்ப திரும்ப அசோக்கிற்கு காதல் டார்ச்சர் கொடுக்க அசோக் அதனை தவிர்த்து வரவே, அமுதா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி, தனது குரலை மாற்றி, தான் அமுதாவின் தங்கை பேசுகிறேன் என அமுதாவே பேசி அசோக்கை மிரட்டியுள்ளார்.
பின்னர் பயந்த அசோக் குமார் மீண்டும் தேனி வந்துள்ளார். ஆனால் அங்கிருந்தது அமுதா தான். இதனை அடுத்து மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ள கூறி அமுதா பிரச்சனை செய்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றுவிட்டது. இதில் போலீசார் அமுதாவுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், அங்கிருந்து இருவரும் சென்றனர்.
இந்நிலையில் தன் காதலை ஏற்க மறுத்த அசோக் குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார் அமுதா. அதன் படி கூலிப்படைகளை ஏவியிருந்தார். அந்த கூலிப்படையினர் அசோக்கின் வருகைக்காக காத்திருந்த போது, அந்த வழியாக சென்ற போலீஸ்காரர்கள் கூலிப்படையினரை பார்த்து சந்தேகமடைந்து விசாரித்தனர். பின்னர், அவர்கள் உண்மையை கூறினார். வழக்கு பதிவு செய்து அவர்களை கைது விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவான அமுதாவை தேடும் பணி நடைபெற்று வருகிறது.