ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!
ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இடையே திண்டுக்கல்லில், ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மலேசியாவில் பணிபுரிந்து வரும் கார்த்திக், சொந்தஊரான திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்துக்கு வந்தபோது, தனது ஃபேஸ்புக் நண்பரான, திண்டுக்கல்லைச் சேர்ந்த தளபதி என்பவருக்கு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதனால், இருவருக்கும் பேஸ்புக் பக்கத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திக் வீட்டிற்கு சென்ற தளபதி அவரை அழைத்துச் சென்று ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.திண்டுக்கல் மேற்கு காவல்நிலைய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள , தப்பியோடிய தளபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.