#Flash:சென்னை மக்களே…மெட்ரோ ரயிலிலும் இன்று முதல் – நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று (07.07.2022) முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும்,மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக,சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை அதிகரிப்பு காரணமாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.