தமிழகத்தில் 2 மாதங்களுக்கு முகக் கவசம் கட்டாயம் – அமைச்சர் விஜயபாஸ்கர்..!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா குறைந்து வந்த போதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.
தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை, கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் இந்த நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றை இன்னும் இரண்டு மாதத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025