நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ள எச்சரிக்கை.!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி,தேனி,கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை, காளம்பூழா ஆற்றின் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 31 செ.மீ., அவலாஞ்சியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பவானி அணையில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர் மழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததையடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.