டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ்-தே புயல் உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று இரவில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 28 செ.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து மழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. நீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…