உலகத்துக்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி ! – முதல்வர் ட்வீட்
உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தேசிய விவசாய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டர் பதிவில், “உழந்தும் உழவே தலை” உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
“உழந்தும் உழவே தலை”
உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். #farmersday pic.twitter.com/rTNdlpMOwm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 23, 2020