பிளஸ் 2 கணிதத் தேர்வில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்..! தேர்வுத்துறை அறிவிப்பு..!

Default Image

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 3ம் தேதியுடன் 12ம் வகுப்பிற்கானப் பொதுத்தேர்வு நிறைவடைந்தது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்திற்கு 5 மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாளில் 47(b)க்கான கேள்வி முழுமை பெறாமல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் குழப்பமடைந்தனர்.

தற்பொழுது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் விடை அளிக்க முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணாக 5 மார்க் அப்படியே வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்