குட்நியூஸ்…3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு;ஊதியம்,இதர படிகள்- பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்