வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோன மற்றும் பொது முடக்கம் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள் வரிகளைச் செலுத்துவதில் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன வரியை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10 லிருந்து ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலாண்டு வரி காலக்கெடு மே 15 லிருந்து ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள் கருத்தில் கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.