சென்னை : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தி கனமழையை கொடுத்துக்கொண்டு இருக்கும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று ( நவம்பர் 30) வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே கூட வர முடியாத அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது.
இந்த சூழலில், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு. 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள 'ஃபெஞ்சல்' புயலானது இன்று (நவ.-30) மாலை 5.30 மணி முதல் தற்போது கரையைக் கடக்க…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் - காரைக்கால் பகுதிக்கு…
சென்னை : தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால்,…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் - காரைக்கால் பகுதிக்கு…
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த "ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில்…
சென்னை : ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் காரைக்கால்…