சென்னை, காஞ்சிபுரம், என 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்  நீட்டிக்க பட்டுள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். 

senthil balaji

சென்னை : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தி கனமழையை கொடுத்துக்கொண்டு இருக்கும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று ( நவம்பர் 30) வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.  காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே கூட வர முடியாத அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது.

இந்த சூழலில், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு. 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்