தமிழ்நாட்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!

Engineering Counselling

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை – 2023 – 2024 முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in and www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Centre Admission Facilitation AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை மேற்குறித்த இணையதள முகவரியில் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கடந்த 14ம் தேதி விண்ணப்பதிவு தொடங்கிய நிலையில் வரும் 22-ஆம் தேதி இறுதிநாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர இணையதளம் வாயிலாக செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்