டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழகத்தில் கடந்த மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து உயர்கல்வியில் சேர சேர்வதற்காக ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்றுடன் டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அக பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்க நிலையில் கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 இன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்…
சென்னை : திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட…
தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் கத்தியால்…
சென்னை : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த அளவுக்கு எதிர்மாறான விமர்சனங்களை பெரும் எனப் படக்குழுவே நினைத்துப்…
கள்ளக்குறிச்சி : கடந்த ஜூன் மாதம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 பேர் விஷச்சாராய அருந்தி உயிரிழந்தனர். கடந்த…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில்…