டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Default Image

டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து உயர்கல்வியில் சேர சேர்வதற்காக ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்றுடன் டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அக பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்க நிலையில் கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.08.2020 வரை மேற்கொள்ளலாம்  என  உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்