வரும் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழக முக்கிய அறிவிப்பு.!
வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. இ.,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிஇ, பிடெக், எம்சிஏ, பி ஆர்க் ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறி, அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.