#NewUpdate: கால்நடை மருத்துவ படிப்பில் சேர காலஅவகாசம் நீட்டிப்பு !

Default Image

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் கடந்த செப்-12 ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தற்பொழுது விண்ணப்பிப்பதற்கான காலஅவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவித்திருப்பது,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டன.

கால்நடை மருத்துவ (BVSc & AH) பட்டப்படிப்பு மற்றும் BTech பட்டப்படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsorec) மற்றும் அயல்நாட்டினருக்கான (Foreign National) இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) 14.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (https://adm.tanuvas.ac.in) காணவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

admission

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்