கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் தொடங்கி இம்மாதம் 28-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.