#BREAKING: மருத்துவ கலந்தாய்வு நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு..!
தமிழகத்தில் 117 எம்.பி.பி.எஸ் மற்றும் 459 பி.டி.எஸ் இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு முடிவடைந்து விட்டாலும், பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்புவதற்காக கலந்தாய்வை மேலும் ஒரு வாரம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.