அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு.!
அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் மற்றும் கண்டம் செய்யும் வயதை அதிகரித்து உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழக அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் இருந்தது. விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது 7 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் என்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய சாலை வசதிகள், நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், நவீன வடிவமைப்பு காரணமாகவும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.