#BREAKING : சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

Published by
Venu

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் ஜூலை 30ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது.இதனால் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 5 போலீசாரை இன்று வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ  போலீசாரிடம் விசாரணை நடத்தியது.எனவே 5 போலீசாரின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தப்பட்டனர். கைதான 5 போலீசாருக்கும் ஜூலை 30ஆம் தேதி வரை காவல்  நீட்டிக்கப்படுவதாக மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ.. 

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

20 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

1 hour ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago