விவசாயிகளுக்கான சலுகை நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
விவசாயிகளுக்கான சலுகை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை.
பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் . வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க, விளைபொருட்களை பாதுகாப்பாக கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக,
சேமிப்பு கிடங்கு வாடகை கட்டணம் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என அறிவித்திருந்த நிலையில்,
தற்போது அதை நீட்டித்து, மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை செலுத்த தேவையில்லை உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/1igI0iA09b— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 26, 2020