குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடரும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நாடு முழுவதிலும் சுற்றுலாத்தலங்கள் பெரும்பாலும் அடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சில சுற்றுலாத் தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மெரீனா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்வதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அங்கு மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…