#BREAKING : சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடை நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது. எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது.
சமீபத்தில் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு சாட்சிகள் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது என விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரப்பா தரப்பில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு காரணம் அரியர் ஆல் பாஸ் முடிவிற்கு ஒத்துக்கொள்ளாததால் தன்னை பதவியில் இருந்து நீக்க நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைத்து அரசு உத்தரவிடப்பட்டது.
தற்போது, துணைவேந்தர் பதவியில் இருந்து தான் ஓய்வு பெற்று விட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
இடைக்கால உத்தரவின்படி விசாரணை அறிக்கை நீதியரசர் கலையரசன் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால் செய்தால் அதை கொண்டு சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவிற்கு தான் தற்போது நீதிபதிகள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.