தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.ஏற்கனவே 15-ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,நீட்டிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்றும் திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
CANCELLATION OF SPECIAL TRAINS UPTO 31st JULY @DRMTPJ @SalemDRM @DrmChennai @TVC138 @propgt14 pic.twitter.com/QFI33zl3WZ
— @GMSouthernrailway (@GMSRailway) July 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)