மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தயாராகி வருகின்றனர். மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.
இருந்தபோதிலும் சில பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது. அதேபோன்று மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது இதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஜூலை 30 ஆம் தேதி வரை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…