பிறப்பு சான்றிதழில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டு காலம் அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளது.
தமிழக அரசு, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளது. அதன்படி 1.1.2000 முன் பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு, மேலும் ஐந்து ஆண்டு காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய கால அவகாசம், 31.12.2019-ல் முடிந்த நிலையில், இந்திய தலைமை பதிவாளர், மேலும் ஐந்து ஆண்டு காலம் அவகாசம் வழங்கி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலன்கருதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தை பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம், ஓராண்டுக்குப் பின், குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.