தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் தான் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.பின் மருத்துவ நிபுணர் குழுவுடன் மாலை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார் .இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துளளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…