#Breaking : ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா ? மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .
இந்நிலையில் வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து ஆலோசனை முதல்வர் பழனிசாமி மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025