#BREAKING : ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்- தமிழக அரசு அறிவிப்பு..!
கோவை திருப்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஊரடங்கு உத்தரவின் போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு ஊசி போட்டு இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.