Dead [File Image]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு, வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இன்றும் அதே போல தில்லையாடியில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருக்கும் போது, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர். பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் உடல்கள் வெடி விபத்தில் பல மீட்டர் தூரத்திற்கு சிதறி இருந்துள்ளளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. உரிமையாளர் மோகனை தவிர உடல் சிதறி உயிரிழந்த மற்ற நபர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…