மயிலாடுதுறையில் வானவெடி தயாரிக்கும் போது வெடி விபத்து.! 4 பேர் உடல் சிதறி பலி.!

Dead

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு, வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன்  ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்றும் அதே போல தில்லையாடியில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருக்கும் போது, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர். பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் உடல்கள் வெடி விபத்தில் பல மீட்டர் தூரத்திற்கு சிதறி இருந்துள்ளளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. உரிமையாளர் மோகனை தவிர உடல் சிதறி உயிரிழந்த மற்ற நபர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்