மதுரையில் மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி வருகிறார் மு.க.அழகிரி.மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்க ஏற்கனவே அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில்,அழகிரி வீட்டில் இருந்து மண்டபம் வரை வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்கள் பதாகைகளில் கருணாநிதி,மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
அவர் அரசியல் குறித்து என்ன முடிவு எடுக்க உள்ளார் என்று தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.ஆலோசனையில் இன்று புதிய கட்சியை தொடங்குவது அல்லது திமுகவுடன் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை முடிந்த பின்னர் அழகிரி செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…