இவற்றையெல்லாம் இந்த விளம்பர ஆட்சியில் எதிர்பார்ப்பது என்றைக்குமே நடக்காத ஒன்று – சசிகலா

Published by
லீனா

திமுக தலைமையிலான அரசோ தன் பங்குக்கு மின் வெட்டு செய்து மக்களை இரவில் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறது என சசிகலா குற்றசாட்டு. 
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை ஏற்படுத்தி, பொதுமக்களை இரவில் தூங்க கூட விடாமல் துன்புறுத்தும் திமுக தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அரிக்கிற் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருவது பெரும் வேதனை அளிக்கிறது. மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், மக்கள் படும் சிரமத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் 107 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான அரசோ தன் பங்குக்கு மின் வெட்டு செய்து மக்களை இரவில் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறது. கடந்த ஆண்டும் இதேபோன்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சரோ மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று ஒரு வாயில்லாத ஜீவன் மீது குற்றம் சுமத்தினார்.

இந்த வருடம் என்ன காரணம் சொல்லலாம் என்ற தீவிர ஆலோசனையில் மின்சாரவாரியம் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும், மின் வெட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான அணில்கள் நேற்றைக்கு தமிழக முதல்வர் தொகுதி என்பது தெரியாமல் அதன் வேலையை காண்பித்து இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நேற்று கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கம் இல்லாமல் தவித்துள்ளனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

திமுக தலைமையிலான அரசு ஏழை எளிய சாமானிய மக்களின் துன்பத்தை போக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். திமுகவிற்கு வாக்களித்த குற்றத்திற்காக மின்சாரமின்றி இரவில் தூங்கமுடியாமல் தவிக்கும் சாமானிய மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு உடனே மின் தட்டுப்பாட்டை சீர் செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக தலைமையிலான அரசு இரண்டு வருடம் தூங்கியது போதும், இனிமேலாவது தூக்கத்திலிருந்து கண்விழித்து, மக்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

16 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

17 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

17 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

18 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

18 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

19 hours ago