250 நாட்களுக்கும் மேலாக 100 அடி தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் மேட்டூர் அணை.!
கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவேரி டெல்டா பாசன வசதிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் வழக்கம் போல ஜூன் 12இல் நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கி இருக்கிறதால் உரிய நேரத்தில் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு தான் மேட்டூர் அணையில் 427 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தது குறிப்பிட தக்கது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டுதான் 250 நாட்களுக்கு மேலாக 100 அடி தண்ணீரை மேட்டூர் அணை தேக்கி வைத்துள்ளது.