சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ! தமிழ் தேர்வு எழுத விலக்கு …
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியை தாய்மொழியாக கொண்ட 24 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கட்டாயத் தமிழ் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டுள்ளது.
2006-ல் தமிழகத்தில் தமிழை கட்டாயமாக்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் தேர்வு கட்டாய உத்தரவுக்கு எதிராக சென்னை ராயபுரம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 24 பேர் வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் இந்தி வழியில் ஆரம்பக் கல்வி பயின்றதாக்வும், ஆறாம் வகுப்புக்குப் பிறகும் தமிழ் ஆசிரியர் நியமிக்கப்படாததால் இந்தியிலேயே படித்து வருவதாகவும், அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் முதல் வகுப்பு முதல் படிப்படியாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் ஆறு, எட்டாம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தமிழை கட்டாயமாக்கியது ஏற்புடையதல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் கட்டாய தமிழ் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.