சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக அனைத்து பொதுசேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு , பரிசோதனை முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் இதையடுத்து, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த பிறகு வீட்டிற்க்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தின் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.