மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்.
இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார்.
அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…