இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டு குடியரசு தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், மதுரையில் குடியரசு தினத்தையொட்டி இன்று 16 மாநில கலைஞர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டு முகாம் ரயில்வே சந்திப்பு அருகே நடைபெற்றது.
இந்நிலையில், நிகழ்ச்சியை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் கலைஞர்கள் தங்கள் மாநில பண்பாட்டை விளக்கும் வகையில் நடனம் ஆடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அந்த வகையில் பஞ்சாப் மாநில கலைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தபோது விழா ஏற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலைஞர்களுடன் அசத்தலாக நடனமாடினார். பின்னர்
அமைச்சரின் நடனத்துக்கு பார்வையாளர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…