பரபரப்பு : 13 பேர் உடலுக்கு பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்து..!

13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.
13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நீலகிரி அருகே மலைப் பகுதியில் காவல் வாகனம் விபத்துக்குள்ளானதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025